பாலமுருகன் கோயில், ரத்தினகிரி - வேலூர் மாவட்டம்ved שוeragenTe
ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவில் வேலூர் மாவட்டம், திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 வது நூற்றாண்டு கவிஞர் அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார். அதாவது 'முருகன், தேவர்களின் கடவுள்' ரத்தினிகிரிவில் வசிக்கிரார்.[1]
இக்கோவிலில் உள்ள தெய்வீக சக்தி மூன்று வடிவங்களில் அதன் ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
1.சன்னதியில் முருகன் சிலை வடிவில் அமைந்துள்ளது. 2.குரு சுவாமி பாலமுருகன் அடிமை வடிவத்தில் அமைந்துள்ளது. 3.பக்தர்கள் வடிவில் அமைந்துள்ளது.
பொருளடக்கம்
- 1 கோவில் திறக்கும் நேரம்
- 2 வருடத்தின் முக்கிய நாட்கள்
- 3 குறிப்புகள்
- 4 மேற்கோள்கள்
கோவில் திறக்கும் நேரம்[தொகு]
காலை 6 மணி முதல் 1 மணி வரை,மாலை 4 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
அபிசேகம் நேரங்கள்: காலை 6 மணி முதல் 10:30 மணி வரை & 5:30 மணி. ஆலய அலுவலக வேலை நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை,மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
வருடத்தின் முக்கிய நாட்கள்[தொகு]
தமிழ் புத்தாண்டு
ஆடிக்கிருத்திகை விழா( முருகன் பிறந்த நாள் )
ஆடி வெள்ளி
கந்த சஷ்டி விழா
நவராத்திரி
பங்குனி உத்தரம்
ஆங்கிலப் புத்தாண்டு( ஜனவரி 1)
சுவாமிஜி பாலமுருகன் அடிமை ஞானம் ஆண்டு நிறைவு - 20 மார்ச்
குறிப்புகள்[தொகு]
http://murugan.org/temples/ratnagir.htm
http://ratnagiri.org/
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://murugan.org/temples/ratnagir.htm